திருப்பூர் அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்கு்ள்பட்ட ஆத்துமேட்டு பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இடம் வேளாண் பகுதியாக உள்ள நிலையில் மதுக்கடை அமையும்பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால், சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமையும் என்பதால் விவசாயிகளும், பொது மக்களும் அப்பகுதியில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி மனு அளித்துள்ளனர்.