திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் மற்றும் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் 90 நாள்களில் கடையை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி 90 நாள்கள் ஆனபோதிலும் அரசு மதுபானக் கடை அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு "வாய்மையே வெல்லும்" என்ற அரசின் தார்மீக உரிமையை மீறி விட்டதா என்ற சுவரொட்டியோடு அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், வாக்குறுதி அளித்தபடி மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்திய இளைஞர்: போக்சோ சட்டத்தில் கைது!