திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி ஊராட்சியில் மைவாடி, நரசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா நிவாரணப் பணிகளில் முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளால், பொதுமக்களிடம் முதலமைச்சருக்கு ஆதரவு பெருகிவருகிறது.
இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் மனம்போன போக்கில் தரமற்ற விமர்சனங்களைச் செய்துவருகிறார்.
திமுக ஆட்சி ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது என்பதை மறந்து அதிமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஸ்டாலின் குழு அமைத்திருப்பது கேலிக்குரியது” என்றார்.
இதையும் படிங்க:அதிமுகவின் ஊழல்கள் பற்றி புகார் அளிப்பதால் கைது - ஆர்.எஸ். பாரதி