திருப்பூரைச் சேர்ந்த அருணாதேவி என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 13ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், 16ஆம் தேதி முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை என எட்டு நாட்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 24ஆம் தேதி அருணாதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலின் அளவு அதிகமானதால் அருணாதேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அருணாதேவியின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் அலட்சியமாக இருந்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எட்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒரு வரலாற்று மைல்கல்’ - திருமாவளவன்