ETV Bharat / state

தீபாவளிக்கு ரெடி.. திருப்பூர் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 10:38 PM IST

Diwali Purchase started: தீபாவளியை முன்னிட்டு திருப்பூரில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் நிரம்பி வழிவதால் வியாபாரம் களைக்கட்டி உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர்: பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

குறிப்பாக பின்னலாடை நிறுவனங்களில் போனஸ் மற்றும் சம்பளம் பெற்றவுடன் பண்டிகைக்கு தேவையான புதிய ஆடைகள், பேன்சி பொருட்கள் மற்றும் பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்வர்.

அந்த வகையில், கடந்த 2 நாட்களாக திருப்பூரில் உள்ள பெரிய பின்னலாடை நிறுவனங்கள் போனஸ் வழங்கின. இதையடுத்து தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ.05) பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், புதுமார்க்கெட் வீதி, வளர்மதி சாலை, குமரன் சாலை, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், பி.என்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து செல்வதை காணமுடிகிறது. இன்றைய நிலையில், கடைவீதியில் பெண்கள் அதிகளவில் வந்து பொருட்கள் வாங்கி செல்வதால் துணிக்கடைகள், பேன்சி கடைகளில் பெருமளவு கூட்டம் காணப்படுகிறது.

வியாபாரிகளும் தீபாவளி விற்பனைக்காக வழக்கத்தை விட அதிகமாக சரக்குகளை இருப்பு வைத்திருக்கிறார்கள். மேலும், இன்று காலை முதல் கடைவீதி பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் கூட்டம் நினைத்ததை விட அதிக அளவில் காணப்படுகிறது. எனவே வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வியாபாரத்தில் மூழ்கி உள்ளனர். மேலும், இன்று முழு நாளும் மழை பெய்யாமல் இருந்தால் தீபாவளி வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி.. அலைமோதும் மக்கள் கூட்டத்தால் திணறும் திருச்சி கடைவீதிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.