ETV Bharat / state

"வாரிசு, ஊழல் அரசியலை தாங்க வேண்டுமென்றால் இதயம் பலமாக இருக்க வேண்டும்" - திமுகவை சாடிய வானதி சீனிவாசன்! - vanathi srinivasan criticized dmk

தமிழ்நாட்டில் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும் என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

இதய தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்
இதய தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் (Credits - Vanathi srinivasan X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 11:35 AM IST

கோயம்புத்தூர் : உலக இதய தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை, கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் உலக இதய தினத்திற்கான விழிப்புணர்வு நடை பயிற்சி பந்தய சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கை சூழலில் இதய நோய் காரணமாக மக்கள் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். இதயத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்காக பல்வேறு பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்து எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.

இதையும் படிங்க : "ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் தலைவர்களின் ஆட்சி நடக்கிறது" - செல்வப்பெருந்தகை பெருமிதம்!

அதேபோல் தமிழ்நாடு அரசியல் குறித்து 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறேன். தமிழ்நாடு அரசியலில் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இதயத்தை பலப்படுத்தி விட்டு வருகிறேன்" எனக் கூறி சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.