திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்ச மழையாக தாராபுரத்தில் 165 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்தக் கனமழையின் காரணமாக அமராவதி பாசன ராஜ வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. தாராபுரம், மூலனூர், புதுப்பாளையம் பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மூலனூர் அருகே கிளாங்குண்டல் பகுதியில் தரைமட்ட பாலம் தண்ணீர் மூழ்கியதால் அப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தாராபுரம் பகுதியில் மூன்றாவது, ஐந்தாவது வார்டு பகுதிகளில் மழையின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை அதிமுக நகரச் செயலாளர் காமராஜ், பங்க் மகேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க:அறுவடை நேரத்தில் பெய்த மழையால் வயலில் மூழ்கிய நெற்பயிர்!