ETV Bharat / state

திருப்பூரில் தொடங்கிய நஞ்சில்லா விவசாயம்; பொதுமக்கள் வரவேற்பு! - திருப்பூர் நஞ்சில்லா விவசாயம்

திருப்பூர் : நஞ்சில்லா விவசாயத்தின் மூலம் விளைவித்த காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நஞ்சில்லா விவசாயத்தை வரவேற்கும் பொதுமக்கள்
author img

By

Published : Oct 4, 2019, 2:42 PM IST

திருப்பூரின் வெற்றி அமைப்பும், நாகையைச் சேர்ந்த இன்ஸ்பயர் ஹோம் என்ற அமைப்பும் இணைந்து திருப்பூரில் ஆண்டிபாளையம் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரம்பொருள் என்னும் பெயரில் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் நஞ்சில்லா விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்குள்ள பண்ணையில் ஆடு, கோழி, மீன் போன்றவை வளர்க்கப்பட்டு விற்பனை செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். மேலும் இங்கு தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும் இயற்கை உரம் மூலம் பயிரிடப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது காய்கறிகளை வாங்கி ச் செல்லும் வகையில் விற்பனை செய்து வருவதால், இந்த முயற்சி பொதுமக்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நஞ்சில்லா விவசாயத்தை வரவேற்கும் பொதுமக்கள்

மேலும், இந்த நஞ்சில்லா விவசாயம் செய்யும் முறை குறித்து வாரம் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், வகுப்புகளோடு நின்றுவிடாமல் அவை செயல் படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விவசாயம் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த சூழ்நிலையில், நஞ்சில்லா விவசாயத்தை இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதே அமைப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க : நெகிழிப் பைகளில் மஞ்சள் விவசாயம்; அசத்தும் கேரள விவசாயி!

Intro:திருப்பூரில் சோதனை முறையில் நஞ்சில்லா விவசாயம் செய்து பெயரிடப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்துவரும் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Body:திருப்பூரின் வெற்றி அமைப்பு மற்றும் நாகையை சேர்ந்த இன்ஸ்பயர் ஹோம் என்ற அமைப்பும் இணைந்து திருப்பூரில் ஆண்டிபாளையம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் அளவில் பரம்பொருள் என்னும் பெயரில் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் நஞ்சில்லா விவசாயம் செய்து வருகின்றனர் இங்குள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடு கோழி மீன் போன்றவை வளர்க்கப்பட்டு விற்பனை செய்து வருவதோடு நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகின்றனர் மேலும் இங்கு தக்காளி வெங்காயம் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் இயற்கை உரம் மூலம் பயிரிடப்பட்டு வருகின்றன பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக் கேற்றவாறு அவ்வப்போது வாங்கி செல்லும் வகையில் விற்பனை செய்து வருவதால் இந்த முயற்சி பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தெரிவிக்கின்றனர் மேலும் இந்த முறை குறித்து வாரம் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் வகுப்போடு நின்று விடாமல் அவை செயல் படுத்தப் படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் விவசாயம் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் நஞ்சில்லா விவசாயம் இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என்பது அமைப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.