ETV Bharat / state

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்: விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்
author img

By

Published : Sep 15, 2020, 2:52 PM IST

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு தேவன் கொத்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, சாலையோரமாக எண்ணெய் குழாய்களை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டக் காலத்தை கருத்தில்கொண்டு இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தின் தொடக்க இடமான கண்டியன் கோயில் அருகே இன்று (செப்.,15) முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் விவசாயிகள் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுடன் திருப்பூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டுச் செல்லாமல் சாலையோரமாக கொண்டு செல்ல அரசுக்கு வலியுறுத்துவதாகக் கூறினார். அதுவரை idpl திட்டத்தை செயல்படுத்த தடைவிதிக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். இதன் பேரில் விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க:வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: வியாபாரிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.