ETV Bharat / state

திருப்பூரில் முதல்முறையாக நீட் தேர்வு மையம் அமைப்பு! - கரோனா முன்னெச்சரிக்கை

திருப்பூர்: நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடந்து வரும் நிலையில், இந்த வருடம் முதல் முறையாக திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு, பரிசோதனைக்கு பின்னர் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

neet-exam-center-set-up-for-the-first-time-in-tirupur

author img

By

Published : Sep 13, 2020, 3:32 PM IST

நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்தேர்வு இன்று (செப். 13) நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையவுள்ளது.

திருப்பூரில் முதல்முறையாக நீட் தேர்வு மையம் அமைப்பு

முன்னதாக, காலை 8 மணி முதலே தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் குவிய தொடங்கினர். இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் மாணவர்களின் ஹால்டிக்கெட்டை சரிபார்த்து, தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க:”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.