ETV Bharat / state

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்களுக்கு ஆடை அனுப்பும் திருப்பூர் நிறுவனம்!

திருப்பூர்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வீரர்களுக்கு இயற்கைக்குகந்த ஆடைகளை வடிவமைத்து அனுப்புகிறது திருப்பூர் பின்னலாடை நிறுவனம்.

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்களுக்கு ஆடை அனுப்பு திருப்பூர் நிறுவனம்!

author img

By

Published : Feb 2, 2020, 8:15 AM IST

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவருகின்றன. டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது அவர்களின் பின்பக்கம் நின்று தவறவிடும் பந்தையும், மைதான எல்லையைவிட்டு வெளியே செல்லும் பந்தையும் எடுத்துத் தருபவர்களைப் பால் கிட்ஸ் என்றழைப்பார்கள்.

இவர்கள் மைதானத்தின் நாலா திசைகளிலும் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்கள், இவர்களுக்கு பயிற்சித் தருபவர்கள், இவர்களது அலுவலர்கள் என அனைவருக்கும் திருப்பூரிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சீருடை தயாரிக்கப்பட்டு, அனுப்பிவைக்கிறது திருப்பூர் பின்னலாடை நிறுவனம்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பெட் பாட்டில்கள் எனப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானம், மருந்து பாட்டில்களிலிருந்து நூல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து ஆடை தயாரித்து அனுப்பியுள்ளனர். பெட்ரோலிய மூலப்பொருள்களிலிருந்துதான், பாலீயெஸ்டர் துணி தயாரிக்க முடியும். அதிலிருந்துதான் பெட் பாட்டில்களும் உற்பத்திசெய்யப்படும்.

இந்நிலையில் பெட் பாட்டில்களிலிருந்து, பாலீயெஸ்டர் நூல் தயாரித்து, அதிலிருந்து ஆடை உற்பத்திசெய்து, ஆஸ்திரேலியாவுக்கு தற்போது அதனை அனுப்பிவைத்து அவர்கள் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பயன்படுத்திவருகிறார்கள்.

இது குறித்து திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் இயங்கிவரும் என்.சி. ஜான் அன் சன்ஸ் நிறுவனர் அலெக்சாண்டர் ஜாப் நெரொத் கூறுகையில், “ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திவரும் அமைப்பு டென்னிஸ் ஆஸ்திரேலியா ஆகும். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் ஆடுகளத்தில் பால் கீட்ஸுகளுக்கான சீருடைகளைக் கேட்டிருந்தனர்.

அதன்படி கடந்த ஜூன் மாதம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, பெட் பாட்டில்களிலிருந்து நூல் எடுத்து, அதனை துணியாக மாற்றுவது தொடங்கி அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டன.

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்களுக்கு ஆடை அனுப்பும் திருப்பூர் நிறுவனம்!

இதற்காக வடமாநிலங்களில் பெட் பாட்டில்களிலிருந்து பாலீயெஸ்டர் நூல் எடுக்கும் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிலிருந்து, நூல் தயாரித்து அதனை துணியாக மாற்றினோம். இதற்கான 4 லட்சம் பெட் பாட்டில்களிலிருந்து, 25000 டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அந்த டி-சர்ட்டில் எத்தனை பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். முழுக்க முழுக்க இயற்கைக்கு உகந்தவகையில், இந்த ஆடைகளைத் தயாரித்துள்ளோம். நூல் தொடங்கி பேக்கிங் வரை அனைத்தும் எக்கோ ஃபிரெண்ட்லி எனப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத வகையில் தயாரித்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

Intro:colthing from bed bottles

Body:colthing from bed bottles

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.