திருப்பூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெகநாதன் போட்டியிடுகிறார். இதனையடுத்து இன்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தஜெகநாதன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ். பழனிசாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்களில் அடிப்படை வசதி, கல்வி, மருத்துவம் ஆகியவை கிடைக்காததால்தான் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதாகவும், அதனால் கிராமங்களின் வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.