திருப்பூர் மாவட்டம் பாப்பன் நகரைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலைசெய்துவந்தார். 2017ஆம் ஆண்டு பிரசவத்திற்காக பூபதிராஜாவின் மனைவி ஊருக்குச் சென்றார். அப்போது பூபதிராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்தத் தனிமையை பயன்படுத்தி அவரது வீட்டருகே வசிக்கும் 16 வயது மாணவியை திருமண ஆசைவார்த்தைக் கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். இதனிடையே சிறுமியின் பெற்றோர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை எனப் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் திண்டுக்கல் பகுதியிலிருந்த பூபதிராஜாவை கைதுசெய்து, சிறுமியை மீட்டனர். பூபதிராஜா மீது ஆள்கடத்தல், குழந்தைகள் பாலியல் குற்ற பாதுகாப்புச் சட்டப்பிரிவுகளின் (போக்சோ) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. பூபதிராஜாவுக்கு ஆள்கடத்தில் பிரிவில் ஏழு ஆண்டுகள் Fசிறை, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு!