ETV Bharat / state

உடுமலை தொகுதிதான் உச்சபட்சமாக இருக்கும் - உடும்புப் பிடியாய் நம்பும் உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலை ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை

திருப்பூர்: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக மட்டமில்லாமல், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதியாகவும் உடுமலை இருக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

minister udumalai radhakrishnan files nomination
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
author img

By

Published : Mar 16, 2021, 6:40 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, "உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமப்புற ஏழை எளிய மக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு நாட்டுக் கோழிகள், விலையில்லா ஆடுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கடந்த கால சாதனைகளைப் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்து மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதியாக உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி அமையும்" என்றார்.

இதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், அமமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கூட்டணிக் கட்சியினர், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'தள்ளாடும் தமிழ்நாட்டை ஸ்டாலின் தூக்கி நிறுத்துவார்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.