ETV Bharat / state

திமுக பொய் பரப்புரை! - அமைச்சர் நிலோஃபர் கஃபில் குற்றச்சாட்டு! - அதிமுக பாஜக கூட்டணி

திருப்பத்தூர்: ஆயுள் காப்பீடு செய்து தருவதாகக் கூறி பொய் பரப்புரை செய்து வரும் திமுகவினரை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் கூறியுள்ளார்.

kafeel
kafeel
author img

By

Published : Nov 30, 2020, 1:01 PM IST

வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் அதிமுக சார்பில், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் கலந்து கொண்டு, நலவாரியத்தின் 53 பிரிவுகளில் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது அவர், “ கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், இஸ்லாமிய மக்கள் திமுகவிற்கு வாக்களித்தீர்கள். ஆனால் இதுநாள் வரை திமுக எம்பி தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரே அரசு அதிமுக தான்.

திமுக பொய் பரப்புரை! - அமைச்சர் நிலோஃபர் கஃபில் குற்றச்சாட்டு!

திமுகவினர், மக்களிடம் ஆயுள்காப்பீடு செய்து தருவதாகக் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு செய்ய வேண்டுமென்றால் ஆட்சியில் இருக்கும் அரசு தான் செய்ய வேண்டும். அதுபோன்று எதுவும் தற்போது கிடையாது. திமுக பொய் பரப்புரை செய்து வருவதை நம்பி வசூல் செய்தால் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’சமஸ்கிருத மொழி செய்தி அறிக்கை வாசிப்பதை கைவிட வேண்டும்’: வைகோ கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.