இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அதிமுக, பாஜக கட்சிகள் ஆளுகின்ற தார்மீக உரிமையை இழந்துவிட்ட நிலையில் அதனை திசை திருப்புவதற்காக சமூக வலைதளங்களில் பணத்தை முதலீடு செய்து பொய்யான அவதூறு, வெறுப்புக் கருத்துகளை பகிர்ந்து வருகிறது. இதன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கரோனாவால் பணியாளர் உயிரிழப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்