திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாள்களாக கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தங்கவேல், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இவரது மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தங்கவேல் இன்று உயிரிழந்துள்ளார்.
இவர் கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.