திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சேவூரைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோருக்கு இன்று அவிநாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவிருந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மண்டபத்தில் அவர்களது திருமணம் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, சேவூர் பகுதியில் உள்ள சிறிய கோயிலில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் திருமணம்: 20 பேர் மட்டுமே பங்கேற்பு