திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்தோஷ் என்பவர் தனக்கு சளி, தொண்டை வலி ,காய்ச்சல் தொடர் இருமல் மூச்சு திணறல் இருந்ததை உணர்ந்து தானாக முன்வந்து தனக்கு கரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனைக்கு கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்றுள்ளார்.
அப்பொது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வாருங்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுத்த நாளே ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று காலை 11.30 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அன்றும் மருத்துவக் குழுவினர் இல்லை என்று சொல்லி திங்கட்கிழமை வரும்படி கூறியுள்ளனர். பின்னர் 29ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கும் சென்றுள்ளார். அப்போது இன்று டைம் முடிவடைந்துவிட்டது, மீண்டும் செவ்வாய்க்கிழமை வாருங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 3.15 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றும், கரோனா வைரஸ் டெஸ்ட் எடுப்பதற்கு உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை சந்தித்து டெஸ்ட் எடுக்க அனுமதி கடிதம் வாங்கி வரும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் சுகாதார ஆய்வாளர் கரோனா வைரஸ் பாதித்து மருத்துவமனையில் இருக்கும் பட்சத்தில் தான் யாரிடம் போய் கடிதம் வாங்குவது. என்னால் பலருக்கு கரோனா ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காணொலி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...ஈரோட்டில் புதிதாக 19 பேருக்கு கரோனா பாதிப்பு!