ETV Bharat / state

கோழிக் கழிவுகளைக் கொட்டவந்த லாரி ஓட்டுநர் போலீசில் ஒப்படைப்பு!

திருப்பூர்: உடுமலை அருகே கோழிக்கழிவுகளைக் கொட்டவந்த லாரியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, ஓட்டுநரை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோழிக்கழிவுகள்
author img

By

Published : Jun 17, 2019, 9:22 AM IST

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக லாரியில் ஏற்றிவந்து கோழிக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் உள்ளிட்டவைகளை அப்பகுதிகளில் கொட்டப்பட்டுவந்துள்ளது.

அந்தக் கழிவுகள் குப்பைக் கிடங்காக சேரவிடாமல் அதனை தீ வைத்தும் எரித்து வந்துள்ளனர். இதனால் அருகில் உள்ள நரசிங்காபுரம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வசிப்போருக்கு துர்நாற்றத்துடன், சுவாசக் கோளாறு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது.

கோழிகழிவுகளை கொட்டவந்த லாரி ஓட்டுநரை போலிஸில் ஒப்படைப்பு!

இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் எத்தனையோ முறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவலர்கள் எடுக்காததால் கோபத்தில் இருந்துவந்த மக்கள், இன்று அதிகாலையில் வழக்கம்போல் கழிவுகளை கொட்டவந்த லாரியை சிறைப்பிடித்தனர்.

பின் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநரை காவல்நிலையத்தில் மீண்டும் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Intro:Body:உடுமலை அருகே நரசிங்காபுரத்தில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் பகுதியில் நீண்டநாட்களாக கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள், கண்ணாடிப்பொருட்களை கொண்டுவந்து கொட்டி தீ வைத்து எரித்து வந்துள்ளனர். இதனால் நரசிங்காபுரம், கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் புகையால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று அதிகாலையில் வழக்கம்போல் கழிவுகளை கொட்ட வந்த லாரியை அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின் லாரியை ஓட்டி வந்த நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இக்கழிவுகளை கொட்டும் தரகர் குறித்து பொதுமக்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தினரும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.