கடந்த 2011ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்நிலையில், ஆலை உரிமையாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், கிரயம் செய்யும் முன்பு பிரச்னை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களான ஜெ. அன்பழகன் எம்எல்ஏ., சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெ. அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கின் தீர்ப்பை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: