திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் சேடபாளையம் சாலையில் உள்ள பனியன் கம்பெனியைச் சேர்ந்த ஐந்து பெண் தொழிலாளர்களுக்கு, நேற்றிரவு அருகிலிருந்த உணவகத்திலிருந்து ஒருவர் சிக்கன் பிரியாணியைச் வாங்கி கொடுத்துள்ளார் .
பிரியாணியை சாப்பிட்ட ஐந்து பெண் தொழிலாளர்களுக்கும் இன்று காலை திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்ட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் சிக்கன் பிரியாணி விநியோகித்த சுப்பிரமணி என்பவரிடம் பல்லடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.