திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.ஜி.ஓ காலனியில் வீரமணி (43), என்பவர், தனது மனைவி யமுனா (40) மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். வீரமணி பூளவாடி பிரிவு அருகே கடந்த 25 ஆண்டுகளாக லேத் பட்டறை தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் வீரமணி குடும்பத்துடன் கோவையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று (நவம்பர் 29) மதியம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 18 சவரன் தங்க நகையும் ரூ. 20,000 பணமும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இச்சம்வம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வீரமணி தகவல் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வீட்டருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அறிமுகமான மூன்றே நாளில் காதலனைத் தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!