ETV Bharat / state

போலீசார் அனுமதியை மீறிய சிவசேனா - கார் கண்ணாடிகள் உடைப்பு - திருப்பூர் செய்திகள்

திருப்பூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அனுமதியை மீறி வந்த சிவசேனா நிர்வாகிகளின் காரை இஸ்லாமிய அமைப்பினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Islamic organisations protest against caa - siva sena members car mirror break
Islamic organisations protest against caa - siva sena members car mirror break
author img

By

Published : Jan 10, 2020, 6:34 PM IST

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஐக்கிய சுன்னத் ஜமாத் மற்றும் ஜமாஅத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை முடிந்த பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் பெரிய பள்ளிவாசல் கோம்பை தோட்டம் மற்றும் பெரிய தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 பள்ளிவாசல்கள் சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஒரே இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல காவல் துறை அனுமதிக்காமல் பாதுகாப்பு அளித்து வந்தனர். அப்போது காவல் துறையினரின் அனுமதியை மீறி சிவசேனா அமைப்பைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் அவ்வழியே தனது காரை ஓட்டி வந்ததோடு, போராட்டத்தை வீடியோவும் எடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர் அமைப்பினர், சாலையோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முன்புற கண்ணாடிகள் சேதமடைந்தன.

போலீசார் அனுமதியை மீறிய சிவசேனா - கார் கண்ணாடிகள் உடைப்பு

காவல் துறையினர் இருதரப்பினரிடையே பேசி, சிவசேனா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தனது காரை சேதப்படுத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் வளம் பாலத்தில் சிவசேனாவை சேர்ந்த நிர்வாகி தினேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதையடுத்து காவல் துறையினர் அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர் ஆட்களுடன் அங்கிருந்து கலைந்து சென்றார்.

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது போலீஸ் அனுமதியை மீறி வந்த சிவசேனா நிர்வாகிகளின் காரை இஸ்லாமிய அமைப்பினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஐக்கிய சுன்னத் ஜமாத் மற்றும் ஜமாஅத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை முடிந்த பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் பெரிய பள்ளிவாசல் கோம்பை தோட்டம் மற்றும் பெரிய தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 பள்ளிவாசல்கள் சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஒரே இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல காவல்துறை அனுமதிக்காமல் பாதுகாப்பு அளித்து வந்தனர் அப்போது போலீசாரின் அனுமதியை மீறி சிவ சேனா அமைப்பை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் அவ்வழியே தனது காரை ஓட்டி வந்ததோடு போராட்டத்தை வீடியோவும் எடுத்து வந்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் சாலையோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன போலீசார் இருதரப்பினரிடையே பேசி சிவ சேனா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் பின்னர் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தனது காரை சேதப்படுத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் வளம் பாலத்தில் சிவசேனாவை சேர்ந்த நிர்வாகி தினேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.