திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள கூத்தம்பாளையம் பிரிவு, பாலாஜி நகரில், ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (ஆகஸ்ட் 11) காலை இரும்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர் .
இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நேற்றைய தினம் வியாபாரம் முடித்து கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மின் கசிவு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தீ விபத்து நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் திருமுருகன்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.