ETV Bharat / state

"வட மாநில ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் கலெக்டர் - சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஏடிஎஸ்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.

திருப்பூர்
திருப்பூர்
author img

By

Published : Mar 2, 2023, 9:05 PM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பேட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியானதால், வட மாநில ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி உள்ளிட்டப் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(மார்ச்.1) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் எஸ்.பி. சசாங் சாய், "திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநிலத் தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒரு வீடியோ திருப்பூரில் ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரவியது. அந்த வீடியோவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்தது, அவை திருப்பூரில் நடந்தது போல பரப்பப்பட்டு வருகிறது.

இதுபோல சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பின் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து, தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம். மொழி பிரச்னை ஏற்படாதவாறு பல்வேறு மொழிகளை பேசக்கூடிய ஐந்து தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'கவுரவ டாக்டர் பட்டம் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது' - சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.