திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் புதிய கட்டடங்களைக் கட்டும் பணி தொடங்கியுள்ளது. அந்த வகையில் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள பழைய மீன் மார்க்கெட்டை எடுத்துவிட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இதில் அஸ்திவாரம் போட குழி தோண்டும் போது பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் 10 அடிக்கும் குறையாமல் காணப்பட்டது.
மேலும், இந்த பகுதியானது 20 வருடங்களுக்கு முன்பு, புதர் மண்டி கிடந்ததால், அருகில் வசிப்பவர்கள் குப்பைகளைக் கொட்டும் பகுதியாக இருந்துள்ளது. 10 வருடங்களுக்கு முன்னதாகவே இங்கு மீன் மார்க்கெட் செயல்படத் துவங்கியுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிய கட்டடங்களைக் கட்டாமல், இந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய பிறகு கட்டடத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது, எவ்வளவுதான் மழை பெய்தாலும் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயராது, கூடவே ஏற்கனவே இருக்கும் நிலத்தடி நீரும் இந்த கழிவுகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:
மாணவர்கள் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தத் தடை - பள்ளிக் கல்வித் துறை