திருப்பூரில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா இம்முறை கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்த முறை விநாயகர் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தாமல் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்வதை புறக்கணித்து வருகின்றனர். இம்முறை திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பது போல திமுகவின் தலைவர் ஸ்டாலின் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும். இல்லையென்றால் இந்து முன்னணி வைக்கும் விநாயகர் சிலைகளில் ஒன்றில் வழிபட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஊரடங்கால் தொய்வடைந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!