திருப்பூர் மாவட்டம், ரயில் நிலையம் அருகில் உள்ள குமரன் சிலை முன்பாக இந்திய, சீன எல்லையில் சீன ராணுவம் அத்துமீறுவதைக் கண்டிக்கும் வகையில், சீன அரசை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சீன பொருள்களை இந்திய மக்கள் யாரும் வாங்கக்கூடாது சீனப் பொருள்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீன அரசின் கொடியை எரிக்க முயன்ற போது, ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சீன அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: சீன அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.