ETV Bharat / state

சிசிடிவி காட்சியால் சிக்கிய கோழி திருடர்கள்

திருப்பூர்: பல்லடம் அருகே தோட்டம், கோழிப்பண்ணைகளில் ஆடு, கோழிகள் திருடி வந்தவர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து பொதுமக்கள் காவல் துறையில் ஒப்படைத்தனர்.

கோழி திருடர்கள்
author img

By

Published : Jul 28, 2019, 5:15 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை, செஞ்சேரி, காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய தோட்டங்களில் கோழிப் பண்ணைகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தோட்டங்களிலிருந்தும், கோழிப் பண்ணைகளில் இருந்தும் ஆடு, கோழிகள் ஆகியவை அடிக்கடி திருடு போயின.

இதுகுறித்து பலமுறை சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பொது மக்களும், காவல் துறையினரும் திணறினர்.

இந்நிலையில் செஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்த்து வந்த நாட்டுக்கோழிகள் நேற்றிரவு திருடு போயின. அதனைத் தொடர்ந்து, அவரது தோட்டத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்ததில் கோழிகளை திருடியது செஞ்சேரி மலையைச் சேர்ந்த லோகேஸ்வரன், சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரியவந்தது.

கோழி திருடர்கள்

அதனையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:பல்லடம் அருகே தோட்டம் மற்றும் கோழிப்பண்ணைகளில் ஆடு கோழிகள் திருடி வந்த திருடர்களைப் பிடித்து பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

.Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை செஞ்சேரி காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கோழிப் பண்ணைகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தோட்டங்களிலிருந்தும் கோழிப் பண்ணைகளில் இருந்து ஆடு கோழிகள் ஆகியவை அடிக்கடி திருடு போய் வந்தன. இதுகுறித்து பலமுறை சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பொதுமக்களும் காவல்துறையினரும் திணறி வந்தனர் இந்நிலையில் செஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வளர்த்து வந்த நாட்டுக்கோழிகள் நேற்றிரவு திருடு போயின அதனை தொடர்ந்து அவரது தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்ததில் அவரது தோட்டத்தில் கோழிகளை திருடியது செஞ்சேரி மலையைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் சுல்தான் பேட்டையை சேர்ந்த தினேஷ் குமார் என்பதும் தெரிய வந்தது அதனை அடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து வந்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சுல்தான்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.