திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கோடை காலத்தில் இதுபோன்று பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நின்ற பிறகு, தளி பிரதான சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.