திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இலவச கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலவச கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் ரூ.18.93 கோடி செலவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்தில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ' மனிதர்களைப் போல கால்நடைகளுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற, இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் 108 சேவையை பயன்படுத்துவது போல் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கு 1962 என்ற எண்ணுக்கு அழைத்து உதவிபெறலாம்' என்றார்.
இதையும் படிங்க:
பெண்னை கொலை செய்து நகை கொள்ளை - ஆயுள் தண்டனை வழங்கிய மகளிர் நீதிமன்றம்!