திருப்பூர்: திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஏற்பட்ட கார் விபத்தில் (Udumalpet Car Accident) அரசு மருத்துவர் உள்பட நால்வர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவராகப் பணியாற்றிவந்தவர் காவியா (25). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனது உறவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏரிப்பாளையம் சேரன் நகர் அருகில் சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே காவியா, அவருடன் பயணித்த அவரது தாத்தா பொன்வேல் (80) ஆகியோர் உயிரிழந்தனர்.
![அரசு மருத்துவர் உட்பட நால்வர் உயிர் இழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-05-tirupur-udumalai-caraccident-vis-tn10008_15112021142019_1511f_1636966219_213.jpg)
மேலும் காரில் பயணம் செய்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சக்திவேல், பிரியதர்ஷினி, பாப்பு என்கிற மூதாட்டி ஆகியோர் படுகாயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் பிரியதர்ஷினி மட்டும் உயிர்பிழைத்தார். மற்ற இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
![அரசு மருத்துவர் உட்பட நால்வர் உயிர் இழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-05-tirupur-udumalai-caraccident-vis-tn10008_15112021142019_1511f_1636966219_91.jpg)
இதையும் படிங்க: வீடியோ: கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் இருந்தவர்களை தூக்கி எறிந்த ஆடி கார்