திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி போன்ற இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும் அடிவாரத்தில் இருக்கும் மும்மூர்த்தி தலமான அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு செல்ல ஐந்தாவது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சலிங்க அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது அருவின் அருகே வனத்துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர் - தண்ணீரை அப்புறப்படுத்த கோரிக்கை