திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தாராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். கார் மனக்கடவு பகுதியில் சென்ற போது கோவையிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் சிக்கியிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றனர் அதோடு அலங்கியம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அலங்கியம் போலீசார் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டபோது அவர்கள் 5 பேரும் ஏற்கனவே உயிரிழந்ததது தெரியவந்தது.
விசாரணையில் காரில் பயணித்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்மணி (வயது 30), பாலகிருஷ்ணன் (65), சித்ரா(28), செல்வராணி (64) மற்றும் கலாராணி (55) என்பது தெரியவந்தது.
உடல்களை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/3RkJTn8KSv
— TN DIPR (@TNDIPRNEWS) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/3RkJTn8KSv
— TN DIPR (@TNDIPRNEWS) November 16, 2023திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/3RkJTn8KSv
— TN DIPR (@TNDIPRNEWS) November 16, 2023
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபா முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சிப்காட்டிற்கு எதிராக போராடிய திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்.. அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!