ETV Bharat / state

பற்றி எரிந்த ஸ்பின்னிங் மில் - பல கோடி ரூபாய் நஷ்டம்

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே இயங்கி வரும் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

ஸ்பின்னிங் மில்
ஸ்பின்னிங் மில்
author img

By

Published : May 7, 2020, 8:30 PM IST

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஏக்கத்தான்வலசு பகுதியில் சொந்தமாக ஸ்பின்னிங் மில் (நூற்பாலை) நடந்திவந்தார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் மின்கசிவு காரணமாக ஸ்பின்னிங் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் காங்கேயம், வெள்ளகோவில், கொடுமுடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவைக்கபட்டன. சுமார் இரண்டு மணி நேரமாகப் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் இயந்திரங்கள், பஞ்சுகள், தீயில் கருகி நாசமாகின. மேலும் விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் திருப்பூரில் குடை விற்பனை அமோகம்: அட காரணம் இதுதானா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.