சிஎஸ்ஐ (சர்ச் ஆஃப் செளத் இந்தியா) திருச்சபை தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, அனைத்து தேவலாயங்கள் முன்பு கிறிஸ்தவர்கள் வேத நூலான பைபிளை அமைதியான முறையில் விநியோகம் செய்ய உடுமலைப்பேட்டையில் கிறிஸ்தவ அமைப்பினர் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 6ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகரின் பல்வேறு தேவலாயங்கள் முன்பு கிறஸ்தவ அமைப்பினர் பைபிள் நூலை அந்தப் பகுதியில் வந்தவர்களிடம் இன்று விநியோகம் செய்தனர்.
மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி பொது இடங்களிலும் மக்களிடம் பைபிளை விநியோகம் செய்துள்ளனர். இதையடுத்து, இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னனியினர், அனுமதியை மீறி அனைத்து செயல்பட்ட கிறிஸ்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.