கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. சில மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எட்டு மாதங்களாக நடைபெறாத விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காமலிருந்து வருவதால் அதிக அளவு லஞ்சம், ஊழல் முறைகேடுகள் நடந்து வருகின்றன. அதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் உடனடியாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் ஒரு ஆண்டுகளாக காங்கேயத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் செயல்பட்டுவரும் தனியார் தொழிற்சாலையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழலில் வரும் நவம்பர் 2ஆம் தேதி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி ஆட்சியரிடம் மனு