திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள லோகநாதன் என்பவரின் ஆட்டுக்குட்டி மூர்த்தி என்பவரது தோட்டத்திற்குள் சென்றதாக லோகநாதனையும் அவரது குடும்பத்தினரையும் மூர்த்தி, அவரது உறவினர்கள் சாதி பெயரைக் கூறி தரக்குறைவாக நடத்தி உள்ளனர்.
மேலும் லோகநாதனையும் அவரது குடும்பத்தினரையும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சாதி ஒழிப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க... அம்பேத்கர் டீசர்ட் போட்ட இங்கே வரலாமா - சாதிவெறியோடு இளைஞரைத் தாக்கிய காவலர்