திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியில் காவல் உடை அணிந்த போலி நபர் ஒருவர் தனியாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த காவல் துறையினர் அவரை பார்த்துள்ளனர். இதையறிந்த அந்ந நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி, தப்பிக்க வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வேன் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து காவல் துறை விசாரணையில், உயிரிழந்த நபர் பல்லடம் அனுபட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அஜித் குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் விபத்து - ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்