கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. அதையடுத்து ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர், அதன் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோயம்புத்தூரிலிருந்து காரணம்பேட்டை வழியாக திருப்பூர் வரும் வாகன ஒட்டுநர்களிடம் ஆதார் எண் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.