திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆனந்தனை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, ஈங்கூர் பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த அமைச்சர் செங்கோட்டையன், "எதிர்கால இந்தியாவைப் பலமாக உருவாக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை மாற்றம் செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஒரு வாரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இதேபோல், மத்திய அரசின் சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆராயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். மேலும், ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.