திருப்பூர் மாவட்ட தாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுத்து (63). இவரது மனைவி ராதாமணி (58). இவர்களது, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, தங்களது காரை எடுத்துக்கொண்டு நேற்றிரவு வீட்டை விட்டு இருவரும் வெளியேறியுள்ளனர்.
பின்னர், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கிவிட்டு, அங்கிருந்து திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதிக்குச் சென்ற இருவரும் திருப்பூர் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த இரும்பு பாதை காவல் துறையினர், இரண்டு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை!