மின்வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு பணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும், மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுவது போல் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு நேரலை