தென்மேற்குப் பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், திருப்பூரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.