இந்து முன்னணி சார்பில் அகில பாரத செயற்குழு கூட்டம் திருப்பூரில் மூன்று நாட்கள் நடக்கிறது. இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்துகொண்டு இதனை தொடங்கிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமகோபாலன், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டும் என்றார்.
மேலும், தமிழில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, இது பைத்தியக்காரத்தனம். எந்த மொழியிலும் நடத்திக் கொள்ளுங்கள். அரசிடமிருந்து கோயில்களை மீட்கவேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.