திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1360 பேர் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். திருப்பூர், உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிக்கப்படுகின்றன.
சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளும், மருந்துகளும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட கரம் கோர்க்கும் ஆசிரியர்கள்