திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குநராக இருந்த கே.விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்துப் பேசிய ஆட்சியர் விஜயகார்த்திகேயன், ‘தமிழக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன், அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்னைக்காக எந்த நேரமும் தன்னை அணுகலாம்’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு சார்பில் வழங்கப்பட்ட தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள்