தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் திருப்பூர் குமரன் நினைவு சிலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கம்பளத்தார்களுக்கு எம்.பி.சி பிரிவில் ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும், கம்பளத்தார் சீரமைப்பு நல வாரியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும்.
இந்திய தேசத்தின் முதல் சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் முழு உருவச் சிலையை அரசு நிறுவ வேண்டும்.
தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் எழுதி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.