ETV Bharat / state

மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கேட்டு ஊழியர்களைத் தாக்கிய நபர்கள்!

author img

By

Published : Aug 2, 2020, 11:05 PM IST

திருப்பூர்: ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கேட்டு அடையாளம் தெரியாத இருவர் ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Curfew: petrol pump staff Attacked by unidentified persons in tiruppur

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கொழுமம் பகுதியில் கண்ணப்பன் என்பவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்திவருகிறார். ஊரடங்கு காரணமாக இன்று மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்குக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தங்களது வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளனர்.

ஊரடங்கின் காரணமாக பங்கு மூடப்பட்டுள்ளதால், பெட்ரோல் வழங்க இயலாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாகனத்தில் வந்த இருவரும் பெட்ரோல் பங்கின் முன்புறக் கண்ணாடியை உடைத்து ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் கண்ணப்பன், குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.